உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 39 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனை ஒரு சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வது குறித்து இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டன.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், விவசாயம், துறைமுகங்கள், விநியோக சேவைகள் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.

மேலும், கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக மாற்றுவதுடன், இயற்கை அழகை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையைப் பிரபல்யப்படுத்துதல் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி முகாமைத்துவப் பிரிவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஸ்டீபன் முசிங், உலக வங்கி தூதுக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அசேல திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

1 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

60 0 0