உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
57 பார்வைகள்

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’ அல்லது ‘குடு லலித்’ என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர், களுத்துறை தெற்கு, தூவ பன்சல வீதியில் வசித்து வந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட அதிகாரிகள் குழுவொன்றினால் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவர், இன்று அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-226 விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாதுக்க, மீகொட மற்றும் கல்தொட்ட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சி-4 ரக அதிபயங்கர வெடிபொருட்கள் தொகையொன்றை தன்னகத்தே வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

66 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

54 0 0