உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

இலங்கை செய்திகள் 35 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும் முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.

முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் வழிவகுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.” – என்றார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (புணூ) தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என்றார்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும் வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

68 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

55 0 0