உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா; மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
99 பார்வைகள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று (20) வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய கலை கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் குறித்த கலாச்சார பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியானது மன்னார் மன்னார் பிரதான பாலத்தடியில் ஆரம்பமாகி மன்னார் நகரசபை மண்டபம் வரை சென்றது.

இதன்போது விருந்தினர்களாக கலந்து கொண்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.செல்வன், மனோன்மணி அறக்கட்டளை பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் இந்து மதகுரு தர்ம குமார குருக்கள் உள்ளடங்களாக அருட்தந்தையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் அமரர் செழுங்கலை வித்தகர் டொனால்ட் தேவதாசன் அல்மேடா அரங்கில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது கலைஞர்களின் பாடல், நடனம், மங்கள நாத இசை சங்கமம், குழு இசை, குழு நடனம், களி கம்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மன்னெழில் (IV) சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு இடம் பெற்றது. இதன்போது மூன்று பிரிவுகளில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 17 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

56 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

64 0 0