பனைமரக்கூடலில் ஏற்பட்ட தீ விபத்து.!
இன்று(18) தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில், கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த தீவிபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளில் கிராம பொதுமக்கள் தீயணைப்பு பணிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
மேலும், இலங்கை இராணுவம், தலைமன்னார் கடற்படைப் பிரிவு மற்றும் பொலிஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்து நிலைமையை அவதானித்து, தேவையான ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கட்டுப்படுத்தல் நடவடிக்கையை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

