பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தானும் போதைப்பொருளைப் பயன்படுத்துவதுடன் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
குறித்த நபர் இலங்கையின் முன்னணி செய்தி நிறுவனமொன்றின் பிராந்திய ஊடகவியலாளராக செயற்பட்டு வருவதாகவும், தனது ஊடக அடையாளத்தைப் பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், இவர் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெறும் பணத்தை அதிக வட்டிக்கு வழங்கி அந்த வருமானத்தில் வசாவிளான் பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் வீடு ஒன்றை நிர்மாணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சில வைத்தியர்கள் நெருக்கமாகச் செயற்பட்டு குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தவறான மருத்துவ அறிக்கைகள் வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பிராந்திய ஊடகவியலாளர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அரச அதிகாரிகளிடையே செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இவரது, போதைப்பொருள் விற்பனை மூலம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் உரிய கவனம் செலுத்தி, தேவையான உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் இவருக்கு உடந்தையாக செயற்படும் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பிலும் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.