பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரி.!
யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த டானியல் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதுடன் இவரது மனைவி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதுடன் அவர்களது தொலைபேசி இலக்கங்களைப் பெற்று, அழைப்புகளை மேற்கொண்டு தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்களால் பல பெண் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தை விட்டு விலகி, வேறு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது செயல்களுக்கு இவரது மனைவி உடந்தையாக இருப்பதாகவும் இதனால் இவர்கள் இவரும் அடிக்கடி இடமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவர்களது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.