உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காலாவதியான பொருட்கள் விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
130 பார்வைகள்

நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு, யாழ்ப்பாண மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகரால், அது கண்டறியப்பட்டு , நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வைத்திருந்த இதே குற்றச்சாட்டுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னரும், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டப் பணம் செலுத்தப்பட்ட விடயம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனையடுத்து, குறித்த விற்பனை நிலையத்தின் வியாபார உரிமத்தை இரத்து செய்த நீதிமன்று, அந்த உத்தரவை நல்லூர் பிரதேச சபைக்கு அனுப்புமாறும் கட்டளையிட்டது.

குறித்த விற்பனை நிலையமானது, இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0