பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக தங்கப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தல், கடத்துதல் மற்றும் சட்டவிரோதமாக காணி கையகப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பல பகுதிகளுக்கு உந்துருளியில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அத்துடன், இவர் சிலருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கி அவர்களை திருட்டுச் செயல்களில் ஈடுபடுத்தி அந்த நகைகளை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நல்லூர் திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளுக்கு சிலரை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இவர் கோயில் காணி தொடர்பாக போலியான ஆவணங்கள் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், கடந்த காலங்களில் கள்ளநகை தொடர்பான சம்பவங்களில் இருந்து தப்புவதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி வழக்குகளில் இருந்து தப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பிலும் இவருக்கு உடந்தையாக செயற்படும் அதிகாரிகள் தொடர்பிலும் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.