உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வலி. மேற்கில் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
159 பார்வைகள்

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது. குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

போராட்டமானது சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது. அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். அந்த மகஜர்கள் பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

36 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0