உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
64 பார்வைகள்

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று நடைபெற்றது.

தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

நேற்றைய தினம் ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றிருந்தது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைபெற்று, திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் எருது வாகனத்தில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கரையினை நோக்கி ஊர்வலமாக சென்றார். அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இராமபிரான் தனது தந்தையின் மரணத்திற்காக பிதிர்க்கடன் செலுத்தியதாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆயிரக்கணக்கானோர் இன்றைய தினம் தமது பெற்றோருக்கு பிதிர்க்கடன்களை செலுத்தியதையும் காணமுடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0