உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் நடைபெற்ற கோடைகால சிறப்பு முகாம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
61 பார்வைகள்

முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் மாணவர்களின் அறிவு, திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கோடைகால சிறப்பு முகாம் 2026, ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

“வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்” என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெற்ற இம்முகாமில், மாணவர்களுக்கு கற்றல், மகிழ்ச்சி, படைப்பாற்றல் மற்றும் புதிய அனுபவங்களை வழங்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டது.

முதலாம் நாள் தொடக்கமும் அறிமுகமும், இரண்டாம் நாள் மகிழ்ச்சியும் சிறப்பான விளையாட்டுகளும், மூன்றாம் நாள் ஆராய்வும் மகிழ்வும் என வங்காலை கடற்கரையில் பட்டம் விட்டு மகிழ்ந்ததுடன், பல்வேறு விளையாட்டுகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நான்காம் நாள் புதையல் வேட்டை – வேட்டையாடு விளையாடு, ஐந்தாம் நாள் தீப்பாசறை மற்றும் கோடைகால முகாமின் இறுதி நிகழ்வு என ஒவ்வொரு நாளும் தனித்துவமான நிகழ்வுகளுடன் அமைந்திருந்தது.

இம்முகாமை சிறப்பாகத் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, முழுமையான வழிகாட்டுதலையும் கண்காணிப்பையும் வழங்கிய பாடசாலை அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க், SDB அவர்களின் சிறந்த தலைமைத்துவம் இம் முகாமின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பாக அமைந்தது.

அதிபரின் வழிகாட்டுதலுடன் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த அருட்சகோதரர் அகில மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அருட்சகோதரர் ஆகாஸ் ஆகியோருடன் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் ஒன்றிணைந்து வழங்கிய அர்ப்பணிப்பான பங்களிப்பினால் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

அருட்சகோதரர்கள் இணைந்து வழங்கிய பங்களிப்பு, மாணவர்களுக்கு ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பன்முகத் தன்மையை அனுபவிக்கும் சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

மாணவர்களின் ஆர்வம் மிக்க பங்கேற்புக்கும், பெற்றோர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் பங்களிப்புக்கும் இக் கோடைகால சிறப்பு முகாமின் வெற்றியில் முக்கிய பங்கு இருந்தது.

மாணவர்களின் முகங்களில் மலர்ந்த புன்னகையும், அவர்கள் பெற்ற புதிய அனுபவங்களும் இம்முகாமின் வெற்றியை எடுத்துக்காட்டின.

இவ்வாறு, கற்றல், மகிழ்ச்சி, நட்பு, படைப்பாற்றல் மற்றும் புதிய அனுபவங்கள் நிறைந்த ஓர் அழகிய பயணமாக கோடைகால சிறப்பு முகாம் 2026 இனிதே நிறைவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0