உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது

சினிமா 2 மாதங்கள் முன்
144 பார்வைகள்

33 வயதான நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில், 73 வயதான பிரபல பொலிவூட் திரைப்பட இயக்குநர் ஷகீல் நூரானி கைது செய்யப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து கலந்துரையாடுவதற்காக, மும்பை மால்வாணி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த நடிகையை வரவழைத்த இயக்குநர் நூரானி, அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதுடன், மிரட்டலும் விடுத்ததாகக் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இயக்குநர், போரிவலி விடுமுறை கால நீதிமன்றத்தில் (Borivali Holiday Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை காவல்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷகீல் நூரானி, ‘படே தில்வாலா’ மற்றும் ‘ஜோரு கா குலாம்’ உள்ளிட்ட பிரபல ஹிந்தித் திரைப்படங்களை எழுதியும், இயக்கியும், தயாரித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

54 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0