உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையக இளைஞர்களின் முன்மாதிரியான செயல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
144 பார்வைகள்

வட்டவளை லொனக் செல்லும் பாதையில் மீனாட்சி தோட்ட வளைவில் கடந்த டித்வா சூறாவளியில் மதகு ஒன்று பகுதியளவில் சேதமடைந்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இம் மதகு முழுமையாக இடிந்துவிழும் அபாயநிலையில் காணப்பட்டது.

இச்சாலை வழியாக நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாட தொழில் நிமித்தம் கடமையில் ஈடுபடுபவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய நிலையில் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகளின் கவனத்திற்கு இத்தோட்ட மக்கள் மகஜர் மூலமாக கொண்டு சேர்த்த போதும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை

எனினும் லொனக் தோட்ட பாற்பண்ணை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக விரைந்து செயல்பட்ட இந்நிறுவனத்தின் உயரதிகாரி கௌரவ பேகஸ் அவர்கள் இம்மதக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாகன உதவி(டோஸர்)ஆகிய பல்வேறு உதவிகளை உடனடியாக வழங்க முன்வந்தது பெரும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இதன் மூலம் இப்பிரதேச சாரதி சண்முகதாஸ் உள்ளிட்ட குழுவினர் கொட்டும் மழையிலும் விரைந்து செயல்பட்டு இச்சாலையை தற்காலிக பாவனைக்கு உகந்ததாக சீர்செய்து அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இம்மனிதநேய பணியை பாராட்டி இப்பிரதேச மக்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0