உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நுவரெலியாவில் கனமழை; மக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
95 பார்வைகள்

நள்ளிரவு பெய்த கனமழையால் 55 குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இச் சம்பவம் நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான பிலக்வாட்டர கெனில்வத்த பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் 26 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இன்று அதிகாலை வேளையில் பாதுகாப்பாக இடம் பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்க்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 30 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் கங்க இகல கோரலை பகுதியில் 196.6 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.

கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.

அரநாயக்க பகுதியில் 182.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. வட்டவளை பகுதியில் 163.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

60 0 0