உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலையைக் கூட நிர்வகிக்க முடியாத அரசால் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
47 பார்வைகள்

சிறைச்சாலை அமைப்பைச் சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22 மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று கேள்விகுறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நடமாடும் நூலகம் என்று அழைக்கப்படும் அறிஞர்கள் நிறைந்த அரசை உருவாக்குவதாகக் கூறிய தற்போதைய அரசு, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியாமலும், சிறைச்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் திணறுகின்றது. இவ்வாறானதொரு அரசால் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசு ஆதரவாக வாக்களித்தது. இருப்பினும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் மஹர சிறைச்சாலையில் மோதல் வெடித்துள்ளது. நீதி அமைச்சரைப் பாதுகாத்த அரசாங்கம், தற்போது அங்கே நிலவும் குழப்பமான சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத இந்த அரசால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாட்டை அழிக்கும் ஓர் அரசே தற்போது செயற்படுகின்றது. இன்று நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0