உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
27 பார்வைகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வெசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட ஹட்டன் – டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன் – டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய் என்பதால், அவரது சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இருவரையும் பிணையில் விடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஹட்டன் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மன்றில் கருத்துத் தெரிவிக்கையில், முதற்கட்ட விசாரணைகளில் மோசடி செய்யப்பட்ட தொகை தற்போது 250 இலட்சம் ரூபாயைக் (2.5 கோடி) கடந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கை நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

இதேவேளை, அஸ்வசும கணக்கில் பணம் வைப்பிலிடப்படாத பயனாளிகள் நேற்று (24) நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது கணக்குகளைப் பரிசோதிப்பதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

இதன்போது, அஸ்வசும பயனாளிகளின் பெயர் பட்டியல் விரைவில் பிரதேச செயலகத்திலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என அதிகாரிகள் அவர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

54 0 0