உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மஹர சிறைச்சாலைச் சம்பவம் நீர்கொழும்புக் கலவரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
59 பார்வைகள்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0