உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு சட்டமா அதிபர் அனுமதி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
68 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

60 0 0