உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
163 பார்வைகள்

கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத் தொகுதியின் புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02.08.2026) நடைபெற்றது.

ரூபா 28 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் நீச்சல் தடாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு, வட மாகாண விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நவீன பயிற்சி வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமாரகமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன்,உதவி மாவட்டச்செயலர்,பிரதம பொறியியலாளல், Clean Srilanka செயலணியின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், , அரச அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக
இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிளிநொச்சி மற்றும் வட மாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கு புதிய ஊக்கத்தை வழங்குவதுடன், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

60 0 0