உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளவயதுத் திருமணம், மற்றும் முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக சாய்ந்தமருதில் விழிப்புணர்வு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
66 பார்வைகள்

இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் சம்பந்தமான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டமொன்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (01) மாலை கிளையின் காரியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கிளையின் கௌரவ தலைவர் அஷ்ஷேய்க் M.M. மீரா ஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், கௌரவ செயலாளர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

சமுதாயத்தின் பாதுகாப்பையும், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காரைதீவு பிரதேச செயலாளர் சார்பான பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது காழி நீதிபதி, விவாகப் பதிவாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர், இணக்க சபை தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொருளாளர், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், நிகாஹ் நடாத்தி வைக்கும் இமாம்கள் மற்றும் ஜம்இய்யாவின் கௌரவ உறுப்பினர்கள் எனப் பல முக்கியஸ்தர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது பூரண ஒத்துழைப்பை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை ஊடகப் பிரிவு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

46 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

26 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0