உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் மறைவு தமிழ் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு – சிறீதரன் எம்.பி கவலை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
111 பார்வைகள்

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறீலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர். ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர் சபேசன் அவர்கள்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில் நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின் அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர்.

போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின் குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசன் அவர்களுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும் பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

26 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0