உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வீடொன்றில் கைத்தொலைபேசி திருட்டு – போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர்  கைது!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
99 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர்  கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூ. 35,000/- பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு தொலைபேசி களவாடப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த வீட்டின் எதிர் வீட்டில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சந்தேகநபர் திருடப்பட்ட கைத்தொலைபேசியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில், அதனை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் இவர் மீது 7 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்காகக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  இப்னு அசார் ஆலோசனைக் கமைய,கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார்  றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

26 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0