உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
59 பார்வைகள்

பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 இன் கீழ் “தனக்கான ஓர் இடம்; அழகான வாழ்க்கை” எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்று (31) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

27 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0