‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்
பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான நிலங்க சம்பத் சில்வா என்ற ‘பாணந்துறை நிலங்க’ ஆகிய இருவரும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது வழக்கினை விசாரித்த கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போடரகம, சந்தேகநபர்கள் இருவரையும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.