உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமிழக முதல்வர் விஜய்யை விரைவில் சந்திக்க திட்டம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
57 பார்வைகள்

இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் திங்கட்கிழமை அன்று, தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளன. அதேநாளில் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கைக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்து, 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துப் பேசத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உடனடியாக விடுவிப்பது தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளோம்.

தமிழக மீனவர் பிரச்சினை இரு நாடுகளின் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திரப் பேச்சுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் உரிய முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

29 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0