உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வேப்பங்குளம், பட்டகாடு, 60ஏக்கர் பகுதிகளில் வீதிமின்விளக்குகள் பொருத்தம்

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
98 பார்வைகள்

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பட்டாணிச்சுபுளியங்குளம் (2ம் வட்டாரம்) வட்டாரத்திற்குட்பட்ட வேப்பங்குளம், பட்டகாடு மற்றும் 60ஏக்கர் ஆகிய பகுதிகளில் வீதிமின்விளக்குகள் வவுனியா மாநகரசபையினால் பொருத்தப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களினால், வட்டார மாநகரசபை உறுப்பினர் வைரமுத்து வரதலட்சுமி மற்றும் மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் நிமித்தம் குறித்த மின்விளக்குகள் நேற்று(30.07) மற்றும் இன்றைய(31.07) தினங்களில் பொருத்தப்பட்டன.

மேற்குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் வீதிமின்விளக்குகள் இன்மையால் குறித்த பகுதி மக்களும் அவ்வீதிகளை பயன்படுத்துவோரும் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர். இதனையடுத்து கிடைக்கப்பெற்ற தொடர் கோரிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து மாநகர முதல்வரின் பணிப்பின்பேரில் குறித்த வட்டார உறுப்பினர் வைரமுத்து வரதலட்சுமி அவர்களின் ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மின்குமிழ்கள் பொருத்தப்பட்டதுடன் இதன்போது குறித்த உறுப்பினரும் நேரில் பிரசன்னமாகியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

58 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

57 0 0