உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
98 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகரித்துச் செல்லும் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுநாடும் ஒன்றாக எனும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக போதையொழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையினை முன்னெடுத்தனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான கசிப்பு போத்தல்களையும் கசிப்பு உற்பத்திக்கான கோடாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் பொருட்களை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது…

15 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

25 0 0
இலங்கை செய்திகள்

அறியாமையால் செய்த தவறுக்காக மரணதண்டனை வழங்குவது அப்பட்டமான மனித உரிமை மீறல் – திஸ்ஸ அத்தநாயக்க கடும் கண்டனம்

அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ…

15 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…

24 0 0