உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இன நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்வதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனைப் பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கதிர்காமம் பாதயாத்திரை சென்ற குழுவுடன் இருந்த நாயின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இவ்வாறான பின்னணியில் சவூதியில் தொழில் புரிந்த கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த கருத்தால் இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துடன் அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இன நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு என்ற அடிப்படையில் முழுமையான நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். நாடு என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இப் பகுதியில் உள்ள…

19 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது…

18 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

28 0 0
இலங்கை செய்திகள்

அறியாமையால் செய்த தவறுக்காக மரணதண்டனை வழங்குவது அப்பட்டமான மனித உரிமை மீறல் – திஸ்ஸ அத்தநாயக்க கடும் கண்டனம்

அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ…

17 0 0