உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அறியாமையால் செய்த தவறுக்காக மரணதண்டனை வழங்குவது அப்பட்டமான மனித உரிமை மீறல் – திஸ்ஸ அத்தநாயக்க கடும் கண்டனம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
18 பார்வைகள்

அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவூதிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படலாம் என்றாலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை (இலங்கைப் பிரஜை) என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் சவூதி அரசு அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும்.

மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ அல்ல. எனினும், இந்த விவகாரம் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாக இராஜதந்திர ரீதியில் துரிதமாகத் தலையிட வேண்டும்.

ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இந்த விடயம் அணுகப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! : அமைச்சர் கே.டி. லால்காந்த மறுப்பு!!

தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த…

1 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இப் பகுதியில் உள்ள…

19 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது…

18 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

28 0 0