உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

நீதித்துறை மீதான நம்பகத்தன்மையால் ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து.!

19 பார்வைகள்

“உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின் போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையைச் சீர்குலைத்து ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்தைக் கோரும். ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு விடயத்துக்காக 18 மாத காலத்துக்குள் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன. ஆனால், எமது நாட்டில் அரசு எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இதனைச் செய்கின்றது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி பதவிக்கால நீட்டிப்பைக் கோரும் அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நான்கு வீதம் வெற்றிடங்களை ஏன் நிரப்பவில்லை? இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அரசே சீர்குலைக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து விசேட விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியுள்ள நிலையில், உள்நாட்டு நீதித்துறை வலுவாக இருப்பதே நாட்டுக்குப் பலம். ஆனால், இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுவதால், அது சர்வதேச மட்டத்தில் நாட்டின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இந்த விவகாரங்கள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். தனிநபர் நன்மைக்காக அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பதவிக்கால நீடிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், அரசு அவற்றைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.” – என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த சஜித்!

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச் சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்…

58 0 0
இலங்கை செய்திகள்

கன்னியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய கட்டுமானம் – நீதிமன்றத் தடையை மீறி அடிக்கல் நாட்டியது தொல்பொருள் திணைக்களம்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அவ்விடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆரத்தழுவி கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்  – செம்மணியில் உருக்கமான தருணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை…

83 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா மாநகர சபை ஊழியர்கள் இன்று அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும்,  இன்று மாநகர அலுவலகத்தை மூடி, பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் பொது சந்தை வீதியில் நடைபாதை…

37 0 0