உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்கு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
121 பார்வைகள்

இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.

மட்டக்களப்பில் பரதகலாலயா எனும் நாட்டியபள்ளியை நடாத்திவரும் ஓய்வுபெற்ற ஆசிரியையான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரன் இலங்கை உட்பட சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் பரதகலாலயா நாட்டிய பள்ளியை நிறுவி பெருமளவு நாட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு நாட்டிய மாணவிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய கலாபூசணம் சுபித்ரா கிருபாகரன் நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக காலமானார்.

நேற்று மாலை அவரது இறுதி நல்லடக்கம் நடைபெற்ற நிலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது அவரது மாணவிகள் கண்ணீருடன் வழங்கிய நாட்டிய சமர்ப்பணம் அனைவரது கண்களிலும் நீர்வரும் நிலையினை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0