உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாவகச்சேரியின் புதிய பிரதி நகர பிதா தெரிவு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
148 பார்வைகள்

யாழ். சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் எதிர்மனுதாரர்களின் பதில் மனு தாமதமாகின்ற காரணத்தால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்கின்றமை காலதாமதமாகின்ற காரணத்தால் புதிய பிரதி நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 21 ஆம் திகதியை 28 ஆம் திகதிக்குத் தாங்கள் ஒத்திவைப்பதற்கு எதிர் மனுதாரர் தரப்பு நேற்று நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்டது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்களைப் பெற வேண்டி இருப்பதால் இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படியும், 24ஆம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கு இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

55 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

45 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

60 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

71 0 0