உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
65 பார்வைகள்

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I) ஏ.ஜி. முபாறக் நேற்று (15) நிந்தவூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது புதிய செயலாளருக்கு பிரதேச சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் வாழ்த்துகளும் வரவேற்பும் அளிக்கப்பட்டன.

தன் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுடன் விசேட அறிமுக அமர்விலும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது, சபையின் தற்போதைய நிர்வாகச் செயற்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இக்கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட புதிய செயலாளர் திரு. ஏ.ஜி. முபாறக், பொதுமக்களுக்கு திறன் மிக்க, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க சேவையினை தங்குதடையின்றி வழங்குவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பலமாக வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார். இன்று 16 ம் திகதி…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக…

39 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆதரவு தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார்…

45 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய…

49 0 0