உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
110 பார்வைகள்

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் ‘கார்போரியம்’ (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0