உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
127 பார்வைகள்

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு “இருத்தலியல் போரில்” (existential war) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஹோர்முஸ் நீரிணை மற்றும் கிரேட்டர் டுன்பு தீவு ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளது.

அத்துடன் ஈரானில் உள்ள ஒரு இராணுவ முகாமின் மீது நடந்த தாக்குதலில் 388-வது பிரிகேடைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கோதுமை சேமிப்பு நிலையம் ஒன்றும் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது.

இந்தநிலையில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான புதிய முடக்கத்தை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.

2026 ஜூன் 17 அன்று மேற்கொள்ளப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்கத் தாக்குதல்களால் செயலிழந்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானின் கடமைகள் செல்லாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய நிலையில் வோஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

இதற்கிடையில்,தான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0