உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
81 பார்வைகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

அதன்படி, ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்த ஓய்வூதியம் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் மொத்த தொகையை ஒரே தடவையாக பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும்.

மேலும், சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணவணுப்பல்களின் பதிவுகளை முறையாக பராமரிக்கவும், ஓய்வூதிய கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரதவிரு’ ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ.2.1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு வரலாற்றில் அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியுள்ளது.

எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளதால், அதனை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0