உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பத்தேகம, தித்தேலியாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபரிடம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0