உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து பல படகுகள் மூலம் கடல் அட்டைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோதக் கடத்தல் கண்டறியப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, கடத்தி வரப்பட்ட 13 படகுகளும், அதில் இருந்த 26 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, உரிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஏல அடிப்படையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோதக் கடல் அட்டைக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேடுதல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0