உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மேலும் இரண்டு கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் தகவல்படி, இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகள் குழுவொன்றிற்கும் இடையே இந்த கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 50 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதுடன் நிலைமையைத் தளர்த்துவதற்காக நீர்கொழும்பு பொலிஸாருக்கு மேலதிகமாக மீரிகம, வெயாங்கொட உள்ளிட்ட சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கைதிகளிடையே ஏற்பட்ட முதற்கட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 34 பேர் காயமடைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏற்பட்ட வன்முறையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0