உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் 23 அட்டப்பளம் சகாத் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல் வாஹிது வஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை(5) மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ‘ஜெமில்’ என்ற நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஜெமிலிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும், மற்ற இருவரிடமிருந்து தலா 60 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கிடைத்த மேலதிக தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், 3 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நான்காவது சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர். சம்பவ தினமான திங்கட்கிழமை(6) அதிகாலை 3.30 மணியளவில் சந்தேக நபர்களில் ஒருவரான வஜீத் என்பவர் வழமைக்கு மாறான முறையில் நடந்து கொண்டுள்ளார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த வஜீத் என்ற சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்தபோது மறைத்து வைத்திருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டை விழுங்கிவிட்டதாக அவருடன் கைவிலங்கிடப்பட்டிருந்த மற்றொரு கைதி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அதனை விழுங்கியதாகவே கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொது மருத்துவமனையின் தடயவியல் நிபுணரால் இன்று (07) பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த வேடகே தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

44 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0