• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

Mathavi by Mathavi
July 7, 2026
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்
0
Home இந்திய செய்திகள்
Share on FacebookShare on Twitter

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கும் மிக அருகில் இருப்பதால் மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப்படகில் சமையல் மஞ்சள், கடல் அட்டை, மெத்தப்பெட்டமன், கஞ்சா ஆயில், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதுடன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு கடல் வழியாக தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவு, மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத்துறை, மரைன் பொலிஸ் என பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு இராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலத்தில் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை இராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் சாலை பாலத்தில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்ததை கண்ட கியூ பிரிவு பொலிர் சந்தேகத்தின் பெயரில் சுற்றிவளைத்து காருக்கு அருகே நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கியூ பிரிவு பொலிஸார் காரை திறந்து சோதனை செய்தபோது காருக்குள் ஆறு இரும்பு கூடைகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காருடன் பந்தைய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) இருவரையும் கைது செய்து இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே கியூ பிரிவு பொலிஸார் புறாவுடன் காரை பறிமுதல் செய்த பின் கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு கடற்கரையில் சோதனை செய்ய சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்று பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து கடலுக்குள் தப்பி சென்றது.

தப்பிச்சென்ற நாட்டுப் படகு குறித்து மரைன் பொலிஸாரின் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பிடிபட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது என ஒப்புக்கொண்டனர்.

இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்தப்பட்டு பிடிபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

Next Post

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.

Related Posts

முகநூல் விருந்தில் அதிரடி முற்றுகை; போதைப்பொருட்களுடன் 15 பேர் கைது.!

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

by Mathavi
July 7, 2026
0

பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை, அங்கொடை, பிலியந்தலை...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்,...

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

by Mathavi
July 7, 2026
0

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது....

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
July 7, 2026
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிர கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

by Mathavi
July 7, 2026
0

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த...

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல்...

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

by Mathavi
July 7, 2026
0

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06)...

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக...

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

by Mathavi
July 7, 2026
0

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, உயர் நீதிமன்றத்தால் 'பொருளாதாரக் கொலையாளிகள்' என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

அரசியல் பழிவாங்கல் இல்லை; சட்டத்தின் முன் சகலரும் சமம்.!

அரசியல் பழிவாங்கல் இல்லை; சட்டத்தின் முன் சகலரும் சமம்.!

by Mathavi
July 7, 2026
0

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி