உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிர கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தீவிர கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் வரவேற்புரையாற்றியதுடன், பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தலைமையுரையாற்றினார்.

மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்புணர்வு, மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கல்வி பாட அறிவுடன் மட்டுமன்றி சமகால உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கு தீவிரக் கற்கைநெறி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன், தமிழ், அரபு, ஆங்கில மொழிப் புலமை, தகவல் தொழில்நுட்ப அறிவு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் திறன் மற்றும் சரியான Prompting திறன் ஆகியவை எதிர்காலப் பட்டதாரிகளுக்கு இன்றியமையாதவை எனக் குறிப்பிட்டார். மேலும், தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களுடன் சமூகப் பொறுப்புணர்வும் தொழில்முறை ஒழுக்கமும் கொண்ட பட்டதாரிகளாக மாணவர்கள் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் உதவி விரிவுரையாளர் எம்.எஸ்.எவ். பஹீமா நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கல்விசார் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

18 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0