உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை (06) ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய மோதல் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதிகாரிகள் குழு மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று, இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கும் என ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

51 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0