தினகரன்.கொம் ( Thinakaran.com ) இணையமானது தனியாருக்குச் சொந்தமானது. இந்த இணைய ஊடகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நடு நிலையான ஓர் ஊடகம். தாயக மக்களின் பிரச்சினைகள், வாழ்வியல் உள்ளடங்களாக அனைத்து வித செய்திகளையும் தாங்கி வருகிறது தினகரன்.கொம் (Thinakaran.com ) இணையம்.
குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இவ் இணையம் அமையப்பெற்றுள்ளது. எனினும் யாரையும் வசை பாடுவதற்காகவும், பக்கச் சார்பாக செயற்படுவதற்காகவும் இவ் இணையம் செயல்படவில்லை. மும் மத மக்களினதும், நாட்டில் அன்றாடம் இடம் பெறுகின்ற நிகழ்வுகளையும், சம்பவங்களையும் வெளிப்படையாக கொண்டு வருவதுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்துவதே எமது நோக்கம். எனவே தினகரன்.கொம் (Thinakaran.com) தொடர்பாக வாசகர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
அத்துடன், இவ் இணையத்தளத்தில் வரும் விளம்பர அறிவித்தல்கள் மூலமாக வரும் வருமானத்தில் இணையத்தள செலவு தவிர்ந்த மிகுதி அனைத்தும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களிற்கும், போரால் பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின் இறுதிச்சடங்கு, அடிப்படைத் தேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் ஊரில் நடைபெறும் செய்திகள், நிகழ்வுகள் என்பவற்றுடன் உங்களது கருத்துக்களையும், ஆக்கங்களையும் Thinakaranreport@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதனையும் பிரசுரிக்க நாங்கள் தயார். செய்தி அனுப்புபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நாங்கள் இன்று வரை நடுநிலையாக செயற்பட்டோம், செயற்படுவோம், இவ் இணையத்திற்கு இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிராந்திய செய்தியாளர்கள் கடமையாற்றுகின்றனர். எமக்கு எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் எமது பணி தொடரும்.