உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஜூலை 7 முதல் 10 வரை நாடாளுமன்ற அமர்வுகள்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
47 பார்வைகள்

நாடாளுமன்றத்தின் அடுத்த வாரத்துக்கான அமர்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று கூறியுள்ளார்.

பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர்ந்த, சபை கூடும் ஏனைய தினங்களில் காலை 9:30 மணி முதல் 10:00 மணி வரை நிலையியற் கட்டளை 22இன் கீழ் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமர்வு தினங்களின் நிகழ்ச்சி நிரல் விவரங்கள் வருமாறு:-

ஜூலை 07: செவ்வாய்க்கிழமை
(தொல்பொருளியல் விவாதம்)

காலை 11:30 – மாலை 5:30: தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் (188ஆம் அத்தியாயம்) 2482/03 மற்றும் 2482/04 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் நடைபெறும்.

ஜூலை 08: புதன்கிழமை
(பிரதமரிடம் கேள்வி மற்றும்
சபை ஒத்திவைப்பு பிரேரணை)

  • காலை 10:00 – 10:30: பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கான நேரம்.
  • காலை 10:30 – 11:00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
  • காலை 11:00 – 11:30: நிலையியற் கட்டளை 27(2)இன் கீழான வினாக்கள்.
  • முற்பகல் 11:30 – பிற்பகல் 3:30: கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06ஆம் இலக்க வர்த்தமானி ஒழுங்குவிதி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03ஆம் இலக்க வர்த்தமானியின் இறக்குமதித் தீர்வை தீர்மானம், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22ஆம் இலக்க வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04, 2479/38 ஆகிய வர்த்தமானிக் கட்டளைகள் மீதான விவாதங்கள்.
  • மாலை 3:30 – 5:30: வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம்.

ஜூலை 09: வியாழக்கிழமை
(நிதி சார்ந்த 3 முக்கிய சட்டமூலங்கள்)

  • காலை 11:30 – மாலை 5:00: மத்திய வங்கி ஆளுநரால் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்ட பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதங்கள்.
  • மாலை 5:00 – 5:30: சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கான நேரம்.

ஜூலை 10: வெள்ளிக்கிழமை
(தனியார் உறுப்பினர் பிரேரணைகள்)

காலை 11:30 – மாலை 5:00: நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, உபுல் கித்சிறி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஹிருனி விஜேசிங்ஹ, ரோஹினீ குமாரி விஜேரத்ன மற்றும் ருவன்திலக்க ஜயகொடி ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணைகள் மீதான விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0