உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
42 பார்வைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அசாத் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெகதீஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகளும் விருந்தினர்களினால் வரவேற்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த 8 பயிற்சி மருத்துவ அதிகாரிகளும் விருந்தினர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறை நீண்ட காலமாக காணப்பட்ட நிலையில்,பலரது முயற்சியினால் குறித்த 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

52 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

46 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

36 0 0