உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
106 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்துவதும், எங்களுடைய மாவட்டம், இந்த வைத்தியசாலை நல்ல முறையில் இன்னும் உயர்வதும் எங்களுடைய கையில்தான் இருக்கிறது. ஒற்றுமை வேண்டும். தேவையற்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது. எங்களுக்கு நல்ல சேவை செய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். வருகின்ற புதியவர்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுகின்ற நல்ல மனப்பான்மை எங்களுக்கு இருக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும், அவர்கள் வெகு விரைவில் வருகை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக நான் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் செயல்பட முடியும். ஆகவே, இந்த வேளையிலே அரசியல் ரீதியான ஆதரவையும், அரச ரீதியான ஆதரவையும் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

மன்னார் மக்களுக்கு தேவையான விடயம். இதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது. தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. ஆகவே, அந்த குழப்பங்களையும் நாங்கள் அறிவோம். இதனுடைய பின்னணியையும் நாங்கள் அறிவோம்.

இருந்தும் சற்று அமைதியாக நாங்கள் இந்த முன்னெடுப்புகளை செய்கின்றோம். அதை விட அமைதியாக வைத்தியசாலை பணிப்பாளர் தனது வேலைகளை செய்து கொண்டிருப்பது மிகவும் போற்றத்தக்கது. எங்களுடைய மண்ணிலே அதாவது மன்னார் மாவட்டத்தில் நிறைய வைத்தியர்கள் இருக்கிறார்கள். அனைவரும் மாவட்டத்தில் கடமையாற்ற வர வேண்டும்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைய வைத்தியர்கள் உள்ள போதும் தமது மண்ணில் கடமையாற்ற இங்கு வருவதற்கு மறுக்கிறார்கள் என்று இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இங்கே வந்து சேவை செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் கூடியளவு எங்களுக்கு நிறைய உதவி செய்கிறார்கள். இங்குள்ள வைத்தியர்களிடம் நல்ல முறையில் அணுகி அவர்களுடைய அர்ப்பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0