உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல மொரவத்த பகுதியில் உள்ள வாகன சேவை மையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (2) பணியாற்றிக்கொண்டிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மொரவத்த, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் அந்தப் பகுதியில் உள்ள வாகன சேவை நிலையம் ஒன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்தவர் என்பதும், அங்கு தனது பணியில் ஈடுபட்டிருந்தபோதே எதிர்பாராத விதமாக இந்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0