உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியபோது, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு பல விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்துக்கு நேரடியாகச் செல்வாக்குச் செலுத்தும் துறைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாறிவரும் உலக நடப்புக்கு அமைய, நிதி சார்ந்த சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. குறிப்பாக, இலத்திரனியல் முறைமை ஊடான திருட்டுக்கள் மற்றும் தாக்குதல்கள் உலகளாவிய மட்டத்தில் தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய நவீன சவால்களை வெற்றிக்கொள்வதற்குப் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம், பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் என்பன கொண்டு வரப்பட்டுள்ளன

தவறான நிதிப் பரிமாற்றங்களினால் நாடு கறுப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டால், அது பொருளாதாரத்துக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, எதிர்கால சவால்களை வெற்றிக்கொள்வதற்காகவே இவ்வாறான திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

36 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

56 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0